நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 ஜூலை, 2015

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2015




நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடந்துவருகின்றது. பதினெட்டாவது புத்தகக் கண்காட்சி சூலை 3 முதல் 12 ஆம் நாள் வரை நடைபெறுகின்றது. இதில் 150 இற்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கலந்துகொண்டு தங்கள் வெளியீடுகளை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்குச் சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பகத்தினர் சிறப்பிக்கப்பட உள்ளனர். நூல்வெளியீடும் நடைபெறுகின்றது. கலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அறிவுக்கு விருந்து தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பொழுதுபோக்கிற்கும் வழிவகை செய்துள்ளது. திரைத்துறை, தொலைக்காட்சித்துறை சார்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு மகிழ்ச்சியூட்ட உள்ளனர்.


07.07.2015 (செவ்வாய்) மாலை ஆறு மணிக்கு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பாராட்டுப் பெறும் எழுத்தாளர் என்ற வரிசையில் மு.இளங்கோவனாகிய எனக்குச் சிறப்புச்செய்ய உள்ளனர். என் எழுத்துப்பணிகளை ஊக்கப்படுத்தும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கும், புத்தகக் கண்காட்சியின் விழாக்குழுவினருக்கும் நன்றியன்.

1 கருத்து:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

தங்கள் பணி சிறப்பிக்கப்படுவதறிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html