நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 20 செப்டம்பர், 2014

உலகத் தமிழ் இணைய மாநாடு – நிறைவு விழா



   புதுச்சேரியில் நடைபெறும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா 21. 09. 2014 மாலை 4.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றது. நிகழ்ச்சிக்குப் பாரத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமை தாங்குகின்றார். முனைவர் கு. கல்யாணசுந்தரம் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் வாசு அரங்கநாதன் முன்னிலையில் நடைபெறும் விழாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, செக், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாநாடு குறித்த தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய உள்ளனர். 

மலேசியாவைச் சேர்ந்த சி. ம. இளந்தமிழ், பொறியாளர் மணி. மணிவண்ணன் வாழ்த்துரை வழங்க உள்ளனர். புதுவைப் பல்கலைக்கழகக் கலைப்புல முதன்மையர் சு. பன்னீர்செல்வம் அவர்கள் கருத்துரை வழங்க உள்ளார். பொறியாளர் இராமகி, பேராசிரியர் செல்வக்குமார் (கனடா), வாசு அரங்கநாதன் ஆகியோர் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்ட உள்ளனர். மாநாட்டு உள்நாட்டுக் குழுத் தலைவர் மு.இளங்கோவன் நன்றியுரையாற்ற உள்ளார்.

1 கருத்து:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

விழா நிகழ்வுகளை தொடர்ந்து நாளிதழ்களிலும் தங்களின் பதிவுகளிலும் படித்து வருகிறேன். தங்களின் சீரிய முயற்சி பாராட்டத்தக்கது. தமிழுக்குத் தாங்கள் செய்யும் இத்தொண்டுக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.