நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 ஆகஸ்ட், 2014

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 19 வது ஆண்டுவிழா, இலக்கிய மன்ற விழா




பெண்கல்விக்கு முதன்மை வழங்கித் தமிழ்வள்ளல் சிங்கப்பூர் எம்.எ. முஸ்தபா அவர்களால் முத்துப்பேட்டையில் நடத்தப்படும் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 19 வது ஆண்டுவிழா, இலக்கிய மன்ற விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இன்று 16.08.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இலக்கிய மன்ற விழாவும், நாளை 17.08.2014 ஞாயிறு மாலை பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற உள்ளன.

ரஹ்மத் பள்ளியின் ஆண்டு விழா சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எஸ்.நாகமுத்து அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக உயர்திரு டத்தோ முகமது இக்பால் அவர்கள் ( Chairman, Business Advisory Council United Nations Escap And Chairman Malaysian Institute of Management) கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.  

இலக்கிய மன்ற விழாவில் திரைப்பட நடிகர் திரு டெல்லி கணேஷ், முனைவர் இரத்தின. வேங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். திரு. இராஜ்மோகன் அவர்கள் நன்றியுரை வழங்குவார்.

சிறப்பு இலக்கிய உரைகள், பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் வருகை தரலாம்.


கருத்துகள் இல்லை: