நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 மே, 2010

புதிய தலைமுறைக்கு நன்றி...

தமிழகத்திலும் பிற பகுதிகளிலும் மாணவர்கள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் விரும்பிப்படிக்கும் இதழாக வெளிவரும் புதியதலைமுறை தமிழ் இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இதழாகும். உருவமும், உள்ளடக்கமும்,காலத்தில் வெளிவரும் சிறப்பும்,எல்லா இடங்களிலும் கிடைக்கும் வளமும் கொண்டு வரும் இந்த இதழில் எண்ணற்ற சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு பதிவாகியுள்ளது.

இவ்வகையில் என் கல்வியார்வம் பற்றியும்,தமிழ் இணைய வேட்கை பற்றியும் மிகச்சிறந்த நேர்காணலை ஆசிரியர் திரு.மாலன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். நேர்காணல் செய்து திரு.யுவகிருட்டினா உயிரோட்டமான நடையில் வழங்கியுள்ளார்.இவர்களுக்கு யான் என்றும் நன்றியுடையேன்.

நேர்காணலைப் பார்த்துத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் செல்பேசி,மின்னஞ்சலில் பலர் வாழ்த்துரைத்தனர்.நான் 14.05.2010 முதல் 25.05.2010 வரை அயல்நாட்டில் இருந்ததால் பலர் அழைத்துப் பேச முயன்றுள்ளனர்.அவர்களுடன் உரையாட இயலாமல் போனமைக்கு வருந்துகின்றேன். 20.05.2010 நாளிட்ட இதழில் வெளிவந்துள்ள அந்த நேர்காணலை இங்குச் சொடுக்கிப் படிக்கலாம்.என் அயல்நாட்டுப் பயணத்தால் உடன் என் பதிவில் எழுத இயலாமல் போனது.பொறுத்தாற்றுங்கள்.

கருத்துகள் இல்லை: